மூன்றே நாட்களில் நாட்களில் காலியில் தென்னாபிரிக்கா காலி

தில்ருவான் பெரேராமற்றும் ஹேரத்தின் சுழலில் சிக்கி தென்னாபிரிக்கா சிதைவடைய இலங்கை அணி 278 ஓட்டங்களால் அபாரவெற்றி பெற்றது.

காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இணிங்ஸிற்காக விளையாடிய இலங்கை அணி கருணாரத்னா ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 158 ஓட்டங்களுடன் 287 ஓட்டங்களைப் பெற்று அனைத்து வக்கெட்டுக்களையும் இழந்தது.

தென்னாபிரிக்க பந்து வீச்சில் ரபாடா 4 ,சம்சி 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

தொடரந்து தனது முதல் இனிங்ஸில் களம் இறங்கிய தென்னாபிரிக்க அணி இலங்கையின் சுழலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 126 ஓட்டங்களில் சுருண்டது. அவ்வணி சார்பில் டுபிளசிஸ் கூடுதலாக 49 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை பந்து வீச்சில் பெரேரா 04,லக்மால் 03, ஹேரத் 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு தனது இரண்டாவது இனிங்ஸைஆரம்“பித்த இலங்கை அணி 190 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.மீளவும் கருணாரத்ன 60,மத்தியூஸ் 35 ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் மகாராஜ் 04, ரபாடா 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

தமது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணிக்கு பெரேரா கடும் அச்சுறுத்தலாக விளங்கினார்.அவரின் சுழலில் தென்னாபிரிக்க வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக நடையை கட்டினர். இறுதியில் தென்னாபிரிக்க அணி 73 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 278 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

பந்துவீச்சில் பெரேரா 06 ஹேரத் 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

ஆட்டநாயகனாக திமுத் கருணாரத்ன தேர்வானார்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1:0 என முன்னிலையில் உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்