பாரத் கிண்ணத்தை கைப்பற்றியது கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா

மண்முனை மேற்கு பிரதேசத்திலே நாவற்காடு பாரத் விளையாட்டுக்கழகம் தனது 55ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக மாபெரும் பகலிரவு உதைப்பந்தாட்ட போட்டியை ஒழுங்கு செய்திருந்தது.இந்நிகழ்விற்கு அதிதிகளாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்,மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்,மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சண்முகராசா எனப் பலர் கலந்து கொண்டனர்.

நேற்றைய தினம் ஆரம்பமான இந்நிகழ்வில் சுமார் 25 அணிகள் பங்குபற்றி இருந்தது.இதில் முதலாம் இடத்தினை பட்டிப்பளை பிரதேசத்தை சேர்ந்த கொக்கட்டிசோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.முறையே இரண்டாம்,மூன்றாம்,நான்காம் இடங்களை முதலூர் கழகமும்,மகிளையூர் கழகமூம்,பாரத் கழகமும் பெற்றுக்கொண்டது.இந்தக்கிண்ணங்களை பிரதேச சபை தவிசாளர் எஸ்.சண்முகராசா வழங்கி வைத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்