மக்கள் என்னை விரும்புகின்றனர்! அடுத்த தேர்தலுக்கு தயார்! டொனால்ட் ட்ரம்ப்

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெறுவதற்கான தயார்படுத்தல்களை முழுமையாக முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு விஜயம் செய்திருந்த அவர் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்ததாக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகியுள்ள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மக்கள் தன்னை விரும்புகின்றனர் என்றும், மீண்டும் தான் ஜனாதிபதியாவதை மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தன்னை தோற்கடிக்க ஜனநாயக கட்சியில் எந்தவொரு வேட்பாளரும் இல்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பில் தனக்கு நன்கு தெரியுமென குறிப்பிட்ட ட்ரம்ப், அவர்களில் அவ்வாறான தன்மையை காணவில்லையென்றும் கூறியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் சர்ச்சைக்கு மத்தியில் வெற்றிபெற்று அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக தெரிவான ட்ரம்ப், பல சர்ச்சைக்குரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார். இந்நிலையில், அடுத்த தேர்தலுக்கும் இப்போதே தயாராகப் போவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்