உலககோப்பை இறுதி போட்டிக்கு பின் புடின் சொன்ன வார்த்தை

உலகக்கோப்பை போட்டியை பார்க்க வந்த கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு இலவச விசா வழங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார், போட்டியை பார்க்கச் சென்ற ரசிகர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

ரஷ்யாவில் 21-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நேற்றைய இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்நிலையில் இறுதி போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ரஷ்ய ஜனாதிபதி புடின், கால்பந்து விளையாட்டு ரசிகர்களுக்கான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் இந்த ஆண்டு முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு வரலாம் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பினால் அடையாள அட்டை வைத்துள்ள கால்பந்து ரசிகர்கள் ஆனந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்