பல மில்லியன் டொலர்களை முதலீடு செய்யும் ஆப்பிள்: எதற்காக?

இயற்கையான முறையில் மின்சாரத்தினை உற்பத்தி செய்வது க்ளீன் எனர்ஜியாக பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு சூரிய சக்தியிலிருந்து மின்சக்தியை பிறப்பிக்கும் திட்டத்தினை சீனாவில் ஏற்படுத்துவதற்கு ஆப்பிள் நிறுவனம் 300 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யவுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை ஆப்பிள் நிறுவனமே வெளியிட்டுள்ளது.

இத் திட்டத்தின் ஊடாக சுமார் 1 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 1 ஜிகா வாட்ஸ் புதுப்பிக்கக்கூடிய மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

இதேவேளை 2020ம் ஆண்டில் 4 ஜிகா வாட்ஸ் மின்சாரத்தினை இவ்வாறு உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்