நிர்வாணமாக உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடிய பிரான்ஸ் ரசிகர்கள்

24 ஆண்டுகளுக்கு பிறகு கால்பந்தாட்ட போட்டியில் உலகக்கோப்பையை கைப்பற்றியதால் அந்நாட்டு மக்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

அந்நாட்டு ரசிர்கள் தங்களது சந்தோஷத்தை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆடிப்பாடி மகிழ்ந்தும், இனிப்புகளை வழங்கி ஒருசில ரசிகர்கள் கொண்டாடினால், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தங்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த வெற்றிக்கொண்டாட்டத்தில் நேற்று இரண்டு ரசிகர்கள் இறந்துபோனது குறிப்பிடத்தக்கது. Champs-Élysées இல் மில்லியன் கணக்கான ரசிகர்கள் ஒன்று திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பொலிசார் குவிக்கப்பட்டனர். இந்த கொண்டாட்டத்தின் உச்சமாக சில ரசிகர்கள் நிர்வாணமாக வெற்றியை கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்