15 வருடங்களின் பின்னர் ஸ்கைப்பில் தரப்படும் புதிய வசதி

இணைய இணைப்பின் ஊடாக வீடியோ அழைப்பு மற்றும் குரல்வழி அழைப்பு போன்றவற்றினை ஏற்படுத்தக்கூடிய வசதியை தரும் ஸ்கைப் ஆனது முதன் முறையாக 2003ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

சுமார் 15 வருட காலமாக சிறந்த சேவையை ஆற்றிவருகின்ற நிலையில் தற்போது புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது.

அதாவது அழைப்புக்களை பதிவு செய்யும் வசதியே அதுவாகும்.

கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பதிப்பில் இவ் வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவ் வசதியினை கொண்ட புதிய பதிப்பினை விண்டோஸ், Mac, iOS, Android மற்றும் Linux போன்ற எந்த இயங்குதளத்திலும் நிறுவி பயன்படுத்த முடியும்.

ஸ்கைப்பிற்கு பதிலாக பல்வேறு மொபைல் அப்பிளிக்கேஷன்கள் அறிமுகமாகியுள்ள நிலையில் இப் புதிய வசதியானது ஸ்கைப் மீதான பயனர்களின் விருப்பத்தினை அதிகரிக்கும் என தெரிகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்