உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அரங்கமே அதிர்ந்த தருணம்

பிபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ‘Fake Love’ எனும் பாடல் இசைக்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குழுமியிருந்த ஸ்டேடியத்தில், இப்பாடல் ஒலிக்கப்பட்ட போது, ரசிகர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடியதால், அரங்கமே அதிர்ந்தது.

தென் கொரியாவைச் சேர்ந்த இசைக் குழுவான BTS இந்தாண்டு வெளியிட்ட, Love Yourself: Tear எனும் ஆல்பத்தில் இடம் பெற்றிருந்த ‘Fake Love’ எனும் பாடல் இசைக்கப்பட்டது.

ஏற்கனவே ஹிட்டாகியிருந்த இப்பாடல், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இசைக்கப்பட்டதால், தற்போது ஹிட் அடித்துள்ளது.

ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்