அமெரிக்காவிற்கு பதிலடி: ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஜப்பானுக்குமிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஜப்பானுக்குமிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

இது உலகின் மிகப்பெரிய வர்த்தக உடன்படிக்கைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

இதன் மூலமாக வர்த்தக வலயம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இது உலகின் மூன்றாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் 600 மில்லியன் மக்களையும் உள்ளடக்கவுள்ளது.

இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கை, அமெரிக்காவால் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது விதிக்கப்பட்ட வரி விதிப்பிற்கு பதிலடியாக அமைவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்