மீண்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயற்பாடுகள்

மத்திய ஈராக்கின் சில பகுதிகளில் மீண்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயற்பாடுகள் ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈராக்கில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றாக வெளியேற்றப்பட்டுவிட்டதாக, ஏழு மாதங்களுக்கு முன்னர் அந்த நாட்டின் அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும் தற்போது மீண்டும் அவர்களின் செயற்பாடுகள் ஆரம்பித்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக கடந்த சில மாதங்களில் மத்திய ஈராக்கில் பல்வேறு அரச திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதுடன், கப்பம் பெறப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இவற்றின் பின்னணியில் ஐ.எஸ். தீவிரவாதிகளே இருப்பதாக கூறப்படுகிறது.

சிரியா – ஈராக் எல்லைப் பகுதியில் நிலைக் கொண்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களது இயக்க செயற்பாட்டை விரிவாக்கிக் கொள்ளும் முனைப்பில் இருக்கின்றனர்.

இதன் அடிப்படையிலேயே ஈராக்கில் மீண்டும் அவர்களது செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்