பயணிகள் புகையிரதம் தடம்புரள்வு – மலையக புகையிரத் சேவை பாதிப்பு

(க.கிஷாந்தன்)

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் 22.07.2018 அன்று மாலை 4.30 மணியளவில் அட்டன் மற்றும் ரொசல்ல ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவை தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த புகையிரதத்தின் காட்சிகாண் கூட பெட்டி தண்டவாளங்களை விட்டு பாய்ந்ததில் இந்த மலையக புகையிரத சேவை தடைப்பட்டுள்ளது.

இந்த புகையிரத சேவை தடைப்பட்டதன் காரணமாக பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட மற்றுமொரு புகையிரதம் அட்டன் புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகளை இ.போ.ச பேரூந்துகளில் கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு பயணங்களை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகளை அட்டன் புகையிரத நிலைய அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்தார்.

தற்போது புகையிரத திணைக்கள அதிகாரிகளினால் புகையிரத பெட்டியை தண்டவாளங்களில் நிறுத்தி புகையிரத வீதியினை சீர்செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புகையிரத தடையினை நிவர்த்தி செய்வதற்காக நாவலப்பிட்டியிலிருந்து பாரதூக்கி புகையிரதம் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான பெட்டியினை மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்படும் எனவும், அதன்பின் இரவு நேர மலையக புகையிரத சேவைகளுக்கான தடை நீங்கும் எனவும் அவ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்