கனடாவில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

கனடாவில், ஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது சனிக்கிழமையன்று கிழக்கு பகுதியில் உள்ள Kew-Balmy கடற்கரையில் இடம்பெற்றுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த நபர் பிற்பகல் 3:30 மணியளவில் கடலுக்குள் சென்றதாகவும், ஆனால் இவர் மீண்டும் வெளியில் வராத நிலையில், அவர் கடல் பாதுகாப்பு குழுவினரால் தண்ணீர் இருந்து இழுத்து எடுக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அவருக்கு தேவையான முதலுதவிகள் வழங்கப்பட்டதுடன், அவரசமாக அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனாலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தெரிவித்த பொலிஸார், குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்