கறுப்பு ஜூலை  1983 – 35 வது அண்டு நினைவு

1983 ஜூலை 24 மற்றும் ஜூலை 29 ஆம் திகதிக்கு இடையில், கொழும்பிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் தமிழ்-விரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன, இதனால் ஆயிரக்கணக்கானோரின் இறப்புகளும் எண்ணற்ற பாதிக்கப்பட்டவர்களின் இடப்பெயர்வுகளும் இடம்பெற்றன.
கறுப்பு ஜூலை தமிழர்களின் வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், தமிழர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி கனடா மற்றும் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
கனேடிய தமிழர் பேரவை கறுப்பு ஜூலை 35 வது அண்டு நினைற்கான நிகழ்வொன்றை ஜூலை 24ம் திகதி நிகழ்த்தவுள்ளது. கறுப்பு ஜூலை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் பேச்சாளர்களையும், ஒரு கண்காட்சியையும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது
கனடிய தமிழர் பேரவையின் ஆதரவுடன் தன்னார்வலர்களால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்