காட்டு யானை தாக்குதல் – இருவர் படுகாயம்

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பட்டிமேடு பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பட்டிமேடு பகுதியில் விவசாய காணியில் இரவு நேர காவலில் ஈடுபட்டிருந்த இவர்கள் இருவரையுமே யானை தாக்கி காயப்படுத்தியுள்ளது. இதனையடுத்து கயாமடைந்த இருவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தயசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு யானையின் தாக்குதலுக்கிலக்கானவர்கள் 52 வயதையுடைய முகம்மது அசனார் கபூர், 62 வயதையுடைய எம்.ஏ.கலந்தார்லப்பை என்பவர்களாவர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்