ஜனாதிபதியின் நிகழ்வில் சீன தேசிய கீதத்துக்கு முன்னுரிமை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட தேசிய சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் தேசிய கீதம் இரண்டாவதாக இசைக்கப்பட்டமை பெரும்பாலான நாட்டுப் பற்றாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீன நாட்டு உதவியினால் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள இக்கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின் ஆரம்பத்தில் சீன தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய கீதத்துக்காக அனைவரும் எழுந்து நின்ற போது முதலில் சீன நாட்டு தேசிய கீதம் இசைக்கக் கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நமது தேசிய கீதம், தேசிய பெருமை என்றெல்லாம் போற்றப்படும் ஒன்று, பொலன்னறுவை நிகழ்வில் ஏன்? இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது என பலரும் வினா எழுப்பியுள்ளனர்.

நாட்டின் ஒருமைப்பாடு குறித்து உயர்த்திப் பிடிக்கும் இந்த காலகட்டத்தில் அரச தலைவர் ஒருவர் கலந்துகொண்ட நிகழ்வில் நாட்டின் தேசிய கீதத்துக்கு ஏன் இரண்டாம் தரம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து தேடிக் கண்டறிந்து விசாரணை நடாத்துவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் பலரும் தெரிவித்துள்ளதாக சிங்கள தேசிய நாளிதழொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்