கொலைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியாம்

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 252 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். குடும்ப பிரச்சினைகள், தகாத உறவு, பாதாள உலக செயற்பாடுகள், பழிவாங்குதல், கொள்ளைச் சம்பவங்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த கொலைகள் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டில் 452 படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. ஒப்பீட்டளவில் இந்த ஆண்டில் கொலைகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டில் 3368 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் 1503 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டில் 1732 பெண் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்