தனது 14 வயது மகளுக்கு நடந்த கொடுமையை கண்ணீருடன் காவல் துறைக்கு தெரிவித்த தந்தை….!

சேர்ந்து படிப்பதற்காக அவரின் வீட்டிற்கு எனது மகளை அனுப்பினேன்.

அவனுக்கும் எனது மகளுடைய வயதில் மகள் ஒருவர் இருக்கின்றார்.

இருந்தும் இதனை செய்ய எப்படி முடிந்தது என தெரியவில்லை.

கண்ணீருடன் 14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமையை காவல் துறைக்கு தெரிவித்த தந்தை….

கெக்கிராவை – இலுக்கேகம பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி தனது தோழியுடன் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அயல் வீட்டுக்கு செல்வது வழக்கம்.

வழமைபோன்று நேற்றைய தினமும் கற்றல் நடவடிக்கைகளுக்காக தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது தேடிச்சென்ற தோழி நீராடிக்கொண்டிருந்த நிலையில், தோழியின் தந்தை மாத்திரம் வீட்டில் இருந்துள்ளார்.

தோழியின் தந்தை இராணுவ முகாமில் கடமையாற்றும் சேவகர் ஒருவராவார்.

சிறுமி சென்று தனது தோழியை அழைத்த போது மகள் நீராடிக்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார் தோழியின் தந்தை..

சரி அங்கிள் நான் சென்று பிறகு வாரன் என கூறிவிட்டு தனது வீட்டிற்கு திரும்பிய சிறுமியை பின்புறமாக வந்து வாயை மூடி தூக்கிக்கொண்டு ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டுள்ளார்.

பின்னர் சிறுமியின் வாயிற்குள் துணிகளை வைத்து அடைத்து விட்டு சிறுமியை நிர்வாணமாக்கி கட்டிலில் கிடத்தி கயிற்றால் கட்டியுள்ளார்.

தப்பிச்செல்ல முடியாமல் தடுமாறிய சிறுமியை சில நிமிடங்களில் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார்.

சிறிது நேரத்தின் பின்னர் சிறுமியை அவரின் வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பிவைத்துள்ளார்.

சிறுமி நடந்தவற்றை யாரிடமும் தெரிவிக்காமல் இருந்ததோடு நேற்று மாலை தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தோழியின் தாய் அதாவது சந்தேக நபரின் மனைவி வெளிநாடொன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்