வடமராட்சி கிழக்கில் மீனவரின் படகு தீக்கிரை

வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த தென்பகுதியைச் சேர்ந்த மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்த மீனவர்களில் ஒருவரின் படகு நேற்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு முள்ளியானை சேர்ந்த செபமாலை சுஜீபன் என்பவரின் படகே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி முள்ளியான் கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் தென்னிலங்கையை சேர்ந்த மீனவர்கள் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை முள்ளியானை சேர்ந்த மீனவர்கள் சுற்றி வளைத்து பிடித்து கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தனர்.

இந்நிலையில் அன்றைய தினம் தென்னிலங்கை மீனவர்களை பிடிப்பதற்கு உதவிய சுஜீபனின் 4 இலட்ச ரூபா பெறுமதியான படகு மற்றும் படகுக்கான வெளியிணைப்பு இயந்திரம் ஆகியவைநேற்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்