வடக்கு – கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்டத் தொடர்

வடக்கு – கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் நேற்று(20) இடம்பெற்ற ஆட்டத்தில் நொர்தேன் எலைட் எவ்.சி. அணி வெற்றிபெற்றது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு இந்த ஆட்டம் இடம்பெற்றது.

நொர்தேன் எலைட் எவ்.சி. அணியை எதிர்த்து மாதோட்டம் எவ்.சி. அணி மோதியது. 1:0 என்ற கோல் கணக்கில் நொர்தேண் எலைட் எவ்.சி. அணி வெற்றிபெற்றது.

ரில்கோ வெற்றி

வடக்கு – கிழக்கு பிறீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் நேற்று இடம்பெற்ற ஆட்டத்தில் ரில்;கோ கொங்கியூரெர்ஸ் அணி வெற்றிபெற்றது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மற்றொரு ஆட்டத்தில் ரில்கோ கொங்கியூரெர்ஸ் அணியை எதிர்த்து மன்னார் எவ்.சி. அணி மோதியது. 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது ரில்கோ.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்