அரசியல் தீர்வுக்காக அபிவிருத்தியை கைவிட்டால் தமிழரின் வாழ்வாதாரம் இல்லாதொழிக்கப்படும்- அமைச்சர் மனோ

அரசியல் தீர்வை எதிர்பார்த்து அபிவிருத்தியை கைவிட்டால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாழ்வாதாரம் இல்லாதொழிக்கப்படும் அபாயம் ஏற்படும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“ தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் அரசியல் தீர்வுக்காக காத்திருந்து அபிவிருத்தியை கைவிட வேண்டாம் என்ற அடிப்படையிலேயே நான் அமைச்சுப் பதவியை ஏற்குமாறு தெரிவித்திருந்தேன்.

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான பொருளாதார தீர்வை பெறுவதற்கு அமைச்சு பதவிகளை பொறுப்பேற்குமாறு கூறியிருந்தேனே தவிர அரசியல் தீர்வை கைவிடுங்கள் எனக் கூறவில்லை.

ஏனைய இனங்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாங்கள் வீழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுவதற்கு நாம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்