தென்னாபிரிக்காவுடனான தொடரை கைப்பற்றியது இலங்கை

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில், இலங்கை அணி 199 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி கொழும்பில் 20 ஆம் திகதி ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

 

முதல் இனிங்சில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இனிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 275 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இந்நிலையில், 490 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இனிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 290 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை அணி சார்பாக ரங்கன ஹேரத் 6 விக்கெட்டுக்களையும், தில்ருவன் பெரேரா மற்றும் தனஞ்சய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனால் 2 வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியை இலங்கை அணி 199 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் 2 : 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியது.ஆட்டத்தின் நாயகன், தொடர்நாயகனாக திமுத் கருணாரத்ன தெரிவானார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்