பூரணை தினத்தில் பூரண சந்திர கிரகணம்

பூரணை தினமான எதிர்வரும் 27 ஆம் திகதி, பூரண சந்திர கிரகணத்தை இலங்கையர்கள் பார்வையிடக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திர கிரகணம் இலங்கை நேரப்படி இரவு 10.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மறுநாள் அதிகாலை 4.58 மணி வரை அதனை பார்வையிட முடியும்.

இந்த வருடத்தில் ஏற்படப்போகும் இரண்டாவது பூரண சந்திர கிரகணம் இது என்பதுடன், கடந்த ஜனவரி மாதம் ஏலவே பூரண சந்திர கிரகணம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்