ஹெரோயினுடன் சிக்கிய அறுவரும் விளக்கமறியலில்

332 ஹெரோயின் பெக்கட்டுக்களுடன் ஹப்புத்தளை – விகாரகல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் இந்த மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை நேற்றைய தினம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாரவூர்தியொன்றை சோதனை செய்த வேளை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் மறைத்து வைத்திருந்த 8 கிராம் 379 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்