வவுனியா சுத்தானந்தா பாலர் பாடசாலையின் விழையாட்டு நிகழ்வு

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 25 வது வருடாந்த விழையாட்டு விழா இன்று (23) கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் பாலர் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக வவுனியா தேசிய கல்வியல் கல்லூரி பீடாதிபதி க.சுவர்ணராஜா கலந்துகொண்டிருந்தார்.

நிகழ்வில் அதிதிகள் மாலை போட்டு வரவேற்கப்பட்டதுடன் பாடசாலை அசிரியையினால் தேவாரம் பாடப்பட்டது. மாணவர்களால் பாடசாலை கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் கீதம் இசைக்கப்ட்டது. நிகழ்வின் தொடர்ச்சியாக மாணவர்களினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டது.

மாணவி ஒருவரால் சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் முன்னைய தலைவரும் நகரசபை உறுப்பினருமான நா.சேனாதிரசா மாலைபோட்டு கௌரவிக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து மாணவி ஒருவர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சுத்தானந்தா இந்து இனைஞர் சங்கத்தின் தலைவரின் தலைமையுரையினைத் தொடர்ந்து விழையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.
பாலர் பாடசாலை மாணவர்களின் உடற்பயிறசி நிகழ்வானது அனைவரின் கண்களையும் கவர்ந்திருந்தது.

இவ் விழையாட்டு நிகழ்வில் மருத்துவர்களான திருமதி பவித்திரா தினேசன், வவுனியா பொது வைத்தியசாலையில் மனநல வைத்தியர் எஸ்.சுதாகரன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் என பெருமளவாணோர் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்