வடக்கு சுகாதார அமைச்சரினால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி கையளிப்பு

மத்திய சுகாதார அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்ட வென்ஸ் ரக அம்புலன்ஸ் வண்டி ஒன்று
இன்று( 23) திங்கட்கிழமை மதியம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் வைபவ ரீதியாக பருத்தித்துரை ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்தார்.
குறித்த அம்புலான்ஸ் வண்டியினுள் அவசர சிகிச்சை உபகரணங்கள் உள்ளடங்களான பொருட்களுடன் கையளிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் பயண்பாட்டிற்காக கெப் ரக வாகனமும் சுகாதார அமைச்சரினால் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்