மன்னார் மாவட்டத்தில் வரலாற்று தடையங்கள் அழிந்து வரும் நிலையில் அதனை பாதுகாக்க வேண்டிய கடமை எமக்குள்ளது-குமரேஸ்

எமது மாவட்டத்தின் வரலாற்று தடையங்கள் அழிந்து வரும் நிலையில் அதனை பாதுகாக்க வேண்டிய கடமையும்,பொறுப்பும் நகர சபை என்ற வகையில் எமக்கு உள்ளது என மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையின் 5 ஆவது அமர்வு   இன்று (23) திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம் பெற்றது.
-இதன் போது பிரேரணைகளை முன் வைத்த பின் உரையாற்றுகையிலேயே மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,
எமது மாவட்டத்தின் வரலாற்று தடையங்கள் அழிந்து வரும் நிலையில் அதனை பாதுகாக்க வேண்டிய கடமையும்,பொறுப்பும் நகர சபை என்ற வகையில் எமக்கு உள்ளது.
அதன் அடிப்படையில் மன்னார் நுழைவாயிலில் உள்ள மன்னார் கோட்டை யினை மறு சீரமைத்து பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக பிரிஜின் லங்கா மற்றும் வெளிநாட்டு தூதரகங்களை உரிய முறையில் கையாண்டு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரித்து எமது சபைக்கு வருமானத்தை அதிகரிப்பதற்கும்,கோட்டையின் புனரமைப்பிற்கான ஆரம்ப பணிகளை மேற்கொள்ளுவதற்கான தீர்மானமாக ஏற்று இச் சபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்