இடைக்கால தடையுத்தரவு 09ம் திகதி வரை நீடிப்பு!

வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனை அமைச்சுப்பதவியில் இருந்து நீக்கும் வகையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வௌியிட்டிருந்த வர்த்தமானியை இடைநிறுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் அடுத்த 9 ஆம் திகதி வரை நீடித்துள்ளது.

மனுதாரரரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பில், ஆட்சேபனை இருப்பின் அறிக்கை தாக்கல் செய்யுமாறு வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதன்பிரகாரம் மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 8 ஆம் திகதி விசாரணை செய்வதற்கு நீதிபதிகளான குமுதினி மற்றும் ஜனக டி சில்வா ஆகிய நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளனர்.

வடமாகாண முதலமைச்சர் தம்மை அமைச்சுப்பதவியில் இருந்து நீக்கி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வௌியிட்ட வர்த்தமானியை இரத்து செய்து நிரந்தர தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பா.டெனிஸ்வரன் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்