அனுமதியின்றிய 04 மருந்தகங்களின் வழக்கு ஒத்திவைப்பு!

முல்லைத்தீவில் இயங்கிய 4 மருந்தகங்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முறையான அனுமதியை பெறாமல், குறித்த 4 மருந்தகங்களும் இயங்குவதாக கடந்த மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரரான உணவு மருந்தக பரிசோத​கர் மற்றும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

தமது மருந்தகங்களை பதிவு செய்துள்ள போதிலும், அதற்கான பதில் அறிவிப்பு இதுவரை கிடைக்கவில்லை எனவும், கடந்த 5 வருடங்களாக தமது மருந்தகங்கள் இயங்குவதாகவும் உரிமையாளர்களால் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய சுகாதார பணிமனையினால் ஏன் இதுவரை காலமும் உரிய பதில் வழங்கப்படவில்லை என நீதவான் எஸ்.டெனீஸ்குமார் கேள்வியெழுப்பினார்.

இதனையடுத்து குறித்த வழக்கினை நடாத்த விருப்பமா என்பது தொடர்பில் நீதிமன்றிற்கு அறிவிக்குமாறு திகதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் வழக்கு விசாரணைகள் அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்தவைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்