இலங்கை பிரதமருடன் அமெரிக்க இராணுவ ஜெனரல் ரொபேர்ட் ஹில்டன் பேச்சு

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளைத் தளபதி ஜெனரல் ரொபேர்ட் பிறவுண், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இலங்கை பிரதமரின் அதிகாரபூர்வ பணியகமான அலரி மாளிகையில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில், இந்தோ – பசுபிக் ஒத்துழைப்பு மற்றும் விதிமுறைகளின் அடிப்படையிலான செயல்முறைகள் குறித்து ஆக்கபூர்வமான பேச்சுக்கள் இடம்பெற்றதாக, இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தெரிவித்துள்ளார்.

அவரும், இலங்கை பிரதமருடனான இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.

அதேவேளை, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவையும், ஜெனரல் ரொபேர்ட் ஹில்டன் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்