இந்த இலட்சணத்தில் அடுத்த முதலமைச்சரும் நானே என்ற கனவில் விக்னேஸ்வரன் மிதப்பது வியப்பாக இருக்கிறது!

குடியானவனுக்குப் பேய் பிடித்தால் பூசாரியைக்கொண்டு வேப்பிலை அடிக்கலாம்ஆனால் பூசாரிக்கே பேய் பிடித்தால் என்ன செய்யலாம்?

வட மாகாண சபையின் நிருவாகம் கடந்த ஒரு மாதகாலமாக பேரளவு முடங்கிப் போய்க் கிடக்கிறதுமுதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்.

அமைச்சரவை கூடவில்லைஅமைச்சரவையைத் தனது ஒப்புதலின்றி கூட்டக் கூடாது என முதலமைச்சருக்கு ஆளுநர் கூரே எழுத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளார்அதற்குக் கனதியான காரணம் இருக்கிறதுமுதலமைச்சர் உட்பட அமைச்சரவையின் எண்ணிக்கை யை மேவக் கூடாது என்பது சட்டம். ஆறுஅமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை கூடினால் சட்டச் சிக்கல் வரும். அரசியல் யாப்பை  மீறுவதாக இருக்கும்.

பா.டெனீஸ்வரன் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.விவிக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்தை நீக்கக் கேட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த செப்தெம்பர் 1, 2017 இல் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்அந்த மனுவில் பிரதிவாதிகளாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்அந்த மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண ஆளுநர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்ஓகஸ்ட் 20, 2017இல் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனக்கு அனுப்பிவைத்த கடித்தில் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார் என்று மனுதாரர் பாடெனீஸ்வரள் கூறினார்.

பதவி நீக்குவதற்கு முன்னர் முதலமைச்சர் தனக்கு எதிராக எந்தவிதமான விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை என்று கூறிய மனுதாரர்,அரசியல் சாசனத்தின்படி மாகாண அமைச்சர் ஒருவரை பதவி நீக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனவே தன்னை பதவி நீக்குவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தீர்ப்பளிக்குமாறு நீதிமன்றத்தில் கோரியிருந்த  மனுதாரர்முதலமைச்சரின் தீர்மானத்தை நீக்கும் கட்டளையொன்றைப் பிறப்பிக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த யூன் 29, 2018 அன்று வெளிவந்ததுஇருபத்துமூன்று பக்கங்கள் கொண்ட தீர்ப்பை மேன்முறையீடு நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கிரமசிங்கி எழுதினார்இரண்டாவது நீதிபதி ஜானக் டி சில்வா அதற்கு இசைவு தெரிவித்தார்.

நீதிபதிகள் தங்கள் இடைக் காலத் தீர்ப்பில் பா.டெனீஸ்வரனது அமைச்சுக் கடைமைகளை எஞ்சிய அமைச்சர்கள் மேற்கொள்வதற்குத் தடை விதித்தது.அதுமட்டுமல்ல பா.டெனீஸ்வரனை அவரது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த கடிதத்தை இரத்து செய்ததுஒரு அமைச்சரை நீக்கும் அதிகாரம் சட்டப்படி முதலமைச்சருக்குக் கிடையாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தார்கள்!

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தவறைச் சுட்டிக் காட்டவே அவரது உத்தரவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தேன்எனது முயற்சி அநீதிக்கு எதிரானதுமுதலமைச்சர் தான்தோன்றித்தனமாக எடுத்த முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது ” என டெனீஸ்வரன் குறிப்பிட்டார்.

எல்லோருக்கும் பலன் சொல்லும் பல்லி தான் மட்டும் கூழ்ப்பானைக்குள் விழுந்து உயிரை விட்ட கதையாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தான் வெட்டிய குழிக்குள் தானே விழுந்துவிட்டார்வழக்குகளை விசாரித்து சான்றுகளின் அடிப்படையில் தீர்ப்பளித்து வந்த முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் ஒரு சாதாரண சட்டத்தரணிக்குத் தெரிந்த சட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டுள்ளார்ஒரு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் கைகளினால் குட்டுவாங்குவது வெட்கக் கேடானது!

நீதிமன்றங்களில் நேரவிரயத்தையும் பணவிரயத்தையும் தவிற்பதற்கு டெனீஸ்வரன் ஒரு ஆலோசனையை முன்வைத்துள்ளார்தன்னைப் பதவி விலக்கியது தவறு என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒத்துக் கொண்டால் தான் தனது பதவியை இராசினாமா செய்துவிடுவதாக அறிவித்தார்இந்த அறிவிப்பு டெனீஸ்வரனின் பெருந்தன்மையை பறைசாற்றுகிறதுஎதிர்பார்த்தது போலவே இந்த அறிவிப்பையிட்டு முதலமைச்சர் மவுனம் சாதிக்கிறார்வழக்கம் போல் விக்னேஸ்வரன் இந்தச் சிக்கலைத் தனது தன்மானத்துக்கு விடுத்த சவாலாக நினைக்கிறார்மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து விக்னேஸ்வரன் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருக்கிறார்.

தன்னை சட்டச் சிக்கலில் மாட்டுவதற்கு அவைத் தலைவர் சிவிகே சிவஞானம் மற்றும் சில உறுப்பினர்கள் முயற்சிப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம் சாட்டுகிறார்இதனை அவைத் தலைவர் சிவஞானம் மறுத்திருக்கிறார்வடமாகாண அமைச்சர்கள் விவகாரம் குறித்து முதலமைச்சர் நினைத்தால் உடனடியாகவே தீர்வினைக் காணலாம் என அவைத் தலைவர் .சிவஞானம் கூறியுள்ளார்இது தொடர்பாக நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சட்டத்தின்படி அமைச்சர்களை நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளதுஅதேபோல் ஆளுநர் அமைச்சர்களை முதலமைச்சரின் ஆலோசனைகளின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்யலாம்அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கிறதுஆனால் அவரால் அமைச்சர்களை நேரடியாக தன் விருப்பப்படி நியமிக்கும் உரிமையில்லைஅதே போல் அமைச்சர்களை தன் விருப்பப்படி நீக்க முடியாதுஅந்த அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுஅதாவது முதலமைச்சர் தனியாகவோ அல்லது ஆளுநர் தனியாகவோ செயற்றபட இயலாதுஇருவரும் ஒன்றாகவே செயற்படவேண்டும். அப்படித்தான் அரசியல் யாப்புச்   சொல்கிறது.

அதேசமயம் அமைச்சர் டெனீஷ்வரன் விடயத்தில் அவரை முதலமைச்சர் பதவி நீக்கம் செய்த முறமை பிழையானது என்றே மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. மற்றப்படி டெனீஷ்வரனை பதவி நீக்கம் செய்ய முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிடவில்லை. இருந்தும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு மாகாண அமைச்சரை நியமிக்கவோ பதவி நீக்கம் செய்யவோ தனக்கு அதிகாரம் இல்லை எனப் பொய் சொல்கிறார் அதன் மூலம் 13 ஏ சட்ட திருத்தத்தினால் எந்தப் பலனும் இவ்லை எனச் சொல்கிறார். அது சரியென்றால் பின் எதற்காக அதே சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட முதலமைச்சர் பதவிக்கு நாயாய் பேயாய் அலைகிறார்?

வட மாகாண சபையின் அமைச்சரவை கூட்டப்படுவதற்கு ஆளுநர் தடை விதித்துள்ளதால் சபையின் நிருவாகம் பேரளவு முடக்கப்பட்டுள்ளது.பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது என்பது போல எமது மக்கள்தான் பாவம் செய்தவர்கள்முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சர் இடையிலான அதிகாரப் போட்டிக்கு இடையில் அகப்பட்டு மக்கள் தவிக்கிறார்கள்அவர்களது துன்பங்கள்துயரங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்றால் குறைந்தது இன்னும் ஆறுமாதங்கள் காத்திருக்க வேண்டும்மாகாண சபைத் தேர்தல் அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடைபெறலாம் எனத் தெரிகிறது.

இது இவ்வாறிருக்க,தனது சாணக்கியம் அறவே அற்ற வீறாப்புப் பேச்சுக்களாலும் நடவடிக்கைகளாலும் விக்னேஸ்வரன் தனது எதிரிகளின் எண்ணிக்கையை கூட்டிக் கொண்டு போகிறார்.

போரினால் வீடுவாசல்களை இழந்து வானமே கூரையாகப் படுத்துறங்கி எழும் தமிழ்மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் பல்லாயிரக் கணக்கில் இப்போதும் இருக்கிறார்கள்போர் முடிந்து 9 ஆண்டுகள் கடந்தும் அவர்கள்,அவர்களது சொந்தக் காணிகளில் மீள் குடியேற்றப்படவில்லை.யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் மக்களுக்கு சொந்தமான 4,507 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படவில்லைஅது படையினர் வசம் உள்ளதுயாழ்ப்பாணக் குடாநாட்டில் 9,564 குடும்பங்களைச் சேர்ந்த 33,286 மக்கள் இன்னமும் மீள்குடியமர்த்தப் படவில்லைமொத்தம் 580 குடும்பங்களைச் சேர்ந்த 2,204 பேர் 24 இடைத் தங்கல் முகாம்களில் ஏதிலிகளாக வாழ்கிறார்கள்இவ்வாறு அல்லல்படும் எமது மக்களுக்கு இந்திய அரசு கடந்த காலத்தில் 40,000 கல்வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளதுஇந்த ஆண்டு இந்திய அரசின் உதவியுடன் மேலும் 60,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இடம் பெயர்ந்து மீளக் குடியேறியவர்களுக்கு சில ஊர்களில் இராணுவம் சிறு தொகையான வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளதுகட்டிக் கொடுத்து வருகிறதுஆனால் விக்னேஸ்வரன் இராணுவம் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதுபற்றி என்ன சொல்கிறார்?

பெரும்பான்மையினரின் அரசியலுக்காக சாதாரண தமிழ்மக்களின் வறுமையைப் பாவித்து உதவ வருவது சரிபோல் தெரிந்தாலும் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவது தமிழினமே” என ஒப்பாரி வைக்கிறார் விக்னேஸ்வரன்இராணுவத்தினர் ஆங்காங்கே சிறு எண்ணிக்கையில் வீடுகள் கட்டிக் கொடுப்பதுகுளங்கள் துார்வாருவது பேன்ற நிருமாண வேலைகளில் ஈடுபடுகிறார்கள்இதற்கு எதிராக விக்னேஸ்வரன் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

முதலமைச்சருக்கு கொழும்பில் சொந்த வீடு இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் அரசாங்க செலவில் மாதம் உரூபா 75,000 கொடுத்து வாடகை வீட்டில் இருக்கிறார். எனவே அவருக்கு வீட்டுச் சிக்கல் இல்லை. ஆனால் ஏழை பாழைகளுக்கு வீட்டுச் சிக்கல் பெரிய சிக்கலாக இருக்கிறது. வீடுகளை யார் கட்டிக் கொடுத்தாலும் இரண்டு கைகளாலும் அவற்றை வாங்க அவர்கள் அணியமாக இருக்கிறார்கள்.

சரிதமிழ் மக்கள் இராணுவத்தினர் கட்டிக் கெடுக்கும் வீடுகளை ஏற்கக் கூடாதுஅது தமிழர்களது தன்மானத்துக்கு இழுக்கு என்றால் முதலமைச்சருக்கு கொடுக்கப்படும் சம்பளம்வீடுபயணச் செலவு எங்கிருந்து வருகிறதுபதவி ஏற்ற பின்னர் யாழ்ப்பாணம் – கொழும்புக்கும் இடையில் இடம்பெற்ற விமானப் பயணத்துக்கு விக்னேஸ்வரன் உரூபா 22 இலட்சத்தை மக்களது வரிப்பணத்தில் இருந்து செலவழித்துள்ளார்இதில் அவரது உதவியாளரும் அடக்கம்இந்தச் சலுகையை விக்னேஸ்வரன் யாரிடம் யாசித்துப் பெற்றார்?

இராணுவ தளபதி சி.சந்திரசிரி ஆளுநராக இருந்த போது அவரிடம்தான் விக்னேஸ்வரன் பயணச் சலுகையை யாசித்துப் பெற்றார்அதில் குற்றமில்லைஆனால் அதே விக்னேஸ்வரன் தமிழ்மக்கள் இராணுவம் கட்டிக் கொடுக்கும் வீடுகளை பெறக் கூடாதாம்அது தன்மானத்துக்கு இழுக்காம்!தமிழ் இனத்தின் எதிர்கால நலன் பாதிக்கப்படுமாம்!

இந்த இலட்சணத்தில் அடுத்த முதலமைச்சரும் நானே என்ற கனவில் விக்னேஸ்வரன் மிதப்பது வியப்பாக இருக்கிறது!

நக்கீரன்

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்