சவால்மிக்க பணியை பிரதமர் மே எவ்வாறு கையாள்கிறார்?

பிரெக்சிற் இன்று உலக மக்களின் கவனத்தையே ஈர்த்துள்ள நிலையில், அதனை கையாளும் பிரதமர் மேயின் சவால்மிக்க பணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் சுவாரஷ்யமாகவும் சாதாரணமாகவும் பதில் வழங்கியுள்ளனர்.

குறிப்பாக, விடுமுறை தினங்களின் கணவனுடன் நடந்து செல்வது, சமையல் செய்வது மற்றும் அமெரிக்க பொலிஸாரை பற்றி ஒளிப்பரப்பாகும் NCIS நாடகத்தை பார்த்து ரசிப்பதென தனக்கு பல விடயங்கள் பிடிக்குமென அவர் கூறியுள்ளார். அவற்றின் மூலம் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நியூகாஸ்டல் பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றிற்கு நேற்று (திங்கட்கிழமை) விஜயம் செய்த மேயிடம், உலகில் சவால்மிக்க பணியாக தற்போது உங்கள் பதவி உள்ளது. அதனை எவ்வாறு கையாள்கின்றீர்கள் என ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”எனக்குப் பிடித்த நிறைய விடயங்கள் உள்ளன. விடுமுறை தினங்களில் கணவனுடன் நடந்துசெல்வது பிடிக்கும். சமைத்து உண்பது எனக்கு பிடிக்கும். என்னிடம் 150இற்கு அதிகமாக சமையல் புத்தகங்கள் உள்ளன. அமெரிக்க பொலிஸ் தொடர்பான NCIS நாடகத்தை விரும்பிப் பார்ப்பேன்” என்றார்.

அமெரிக்காவுடனான உறவு குறித்து மற்றொருவர் வினவினர். அதற்கு பதிலளித்த மே, ”இரு நாடுகளுக்கிடையிலான உறவு பல வருடங்களுக்கு முற்பட்டது. எதிர்காலத்திலும் இவ்வாறே செல்லும். பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்கா எமது சிறந்த நட்பு நாடாகும். எதிர்காலத்தில அமெரிக்காவுடன் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளேன். அமெரிக்காவுடன் இணைந்து வர்த்தகத்தை முன்னெடுப்பதற்கான சில நடவடிக்கைகளை ஏற்கனவே தயார்படுத்தியுள்ளோம்.

நேட்டோ நாடுகளை பொறுத்தவரையில், பாதுகாப்பு தொடர்பில் அதிக பங்களிப்பை வழங்கும் முதலாவதும் இரண்டாவதும் நாடாக அமெரிக்காவும் பிரித்தானியாவுமே உள்ளன. இந்த நட்பு சிறப்பானது. பல சந்தர்ப்பங்களில் தோளோடு தோள் நின்றோம். எதிர்காலத்தில் இந்த நட்பு மேலும் பலமடையும்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்