மனைவி மற்றும் காதலியிடம் தள்ளி இருங்கள்: இந்திய வீரர்களுக்கு திடீர் கட்டுப்பாடு

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி இந்திய வீரர்கள், தங்களது மனைவி மற்றும் காதலியிடம் முதன் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடியும் வரை ஒதுங்கி இருக்க வேண்டும் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. அதனைத் தொடர்ந்து விளையாடிய ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.

இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி தொடங்க உள்ளது. அதற்கு முன்பு ஜூலை 25ஆம் திகதி Essex அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது.

இங்கிலாந்தில் ஒருநாள் போட்டித் தொடர் முடிந்த பின்னர், இந்திய அணி வீரர்கள் பலர் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் விடுமுறையை கழித்தனர். அதன் பின்னர், மனைவி மற்றும் காதலிகள் உடனிருப்பதால், இந்திய வீரர்களால் சரியாக விளையாட முடியவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே, முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடியும் வரை, இந்திய அணி வீரர்கள் தங்களது மனைவி மற்றும் காதலிகளிடம் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்