ஜெயந்திபுரவட்டார மக்கள் சந்திப்பு

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட ஜெயந்திபுர வட்டார மக்களின் தேவைகள்,குறைபாடுகளை தெரிந்து கொள்வதற்கான சந்திப்பொன்று 24/07/2018 அன்று பி.ப4.00 மணியளவில் நடைபெற்றது.சந்திப்புக்கான ஏற்பாட்டினை மாநகர சபை உறுப்பினர் திரு.தவராசா அவர்கள் வட்டார உறுப்பினர் என்ற வகையில் தலைமை ஏற்று நடாத்தினார்.

அதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்,தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம்,மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,கௌரவ மாநகர சபை உறுப்பினர் து.மதன் ஆகியோர் மக்களின் சேவைகளை செவிமடுத்தனர்.வீட்டுத்தேவை,தொழிற்தேவை,மலசலகூடத்தேவை,போக்குவரத்துதேவை,நூலகத்தேவை,சமூர்த்திதேவைகள்,வீதிப்புணரமைப்பு போன்ற தேவைகளை மக்கள் முன்வைத்தனர்.

இவைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொண்டனர்.குறித்த தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மேயர்,பிரதிமேயர்,மாநகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் எடுத்துரைத்தனர்.இவ்வேலை கம்பெரலிய நிகழ்ச்சித்திட்டம்,என்ரபிரைஸ் ஸ்ரீலங்கா பற்றியும் அதன் மூலமான உதவிகள் பற்றியும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் விளக்கமளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்