தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கைஅணி புதிய சாதனை!!

தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கடந்த 12 ஆண்டுகளில் இருமுறை முழுமையாக வென்ற ஒரே அணி என்ற சாதனையை இலங்கை அணி செய்துள்ளது.

இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்ட தென் ஆபிரிக்கா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இத்தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.

இதையடுத்து தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கடந்த 12 ஆண்டுகளில் (ஏப்ரல் 2006 முதல்) இருமுறை முழுமையாக வென்ற ஒரே அணி என்ற சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது. ஏற்கனவே கடந்த 2006-ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்