மூன்று ஓட்டங்களால் பங்களாதேஷை வீழ்த்தியது மேற்கிந்திய அணி

வங்காளதேச அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணி போராடி வெற்றி பெற்றது.

மேற்கிந்திய – வங்காளதேச அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் விளையாடிய மேற்கிந்திய அணி 49.3 ஓவர்களில் 271 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது

ஹெட்மயர் சதம் அடித்தார். அவர் 93 பந்தில் 125 ஓட்டங்கள் (3 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்தார். ரூபல் உசேன் 3 விக்கெட்டும், சகீப்-அல்-ஹசன், முஷ்டா பிசுர் ரகுமான் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய வங்காளதேசம் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 268 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் மேற்கிந்திய அணி 3 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. முஷ்பிகுர் ரகிம் 68 , சகீப்-அல்-ஹசன் 56 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் தொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்று இருந்தது. 3-வது மற்றும் கடைசி ஆட்டம் வரும் 28ஆம் திகதி நடக்கிறது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்