அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் அரசியல் தீர்வில் பயனில்லை! – கோத்தா

நாட்டில் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகங்களின் செய்தியாசிரியர்களை நேற்று மாலை சந்தித்து பேசிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் மக்களின் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை தேவைகள் நிறைய இருக்கின்றன. அவற்றை தீர்க்காமல், தீர்வுகளை முன்வைப்பதில் அர்த்தமில்லை. உமா மகேஸ்வரனினால் கிளர்ச்சி ஏற்படுத்தப்பட்டமைக்கான அடிப்படைக் காரணமும் இவ்வாறான பிரச்சினைகளே. இதனை தீர்க்கும் நடவடிக்கைகளை கடந்த அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.

எனினும், தமிழ் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில், தமிழ் மக்களுக்கு பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதே, அவர்களுக்கான முதலாவது சிறந்த தீர்வாக அமையும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்