வீடு புகுந்து பெண்ணின் கழுத்தை வெட்டிய நபர்!! – யாழில் சம்பவம்

வீட்டில் தைத்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தை மர்ம நபர் ஒருவர் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பினார்.

படுகாயமடைந்த சத்தியசோதி சிறிகௌசி (வயது 48) பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தும்பளைப் பகுதியில் பிள்ளையுடன் வசித்து வரும் சிறிகௌசி தனது வீட்டில் தைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்பக்கமாக வந்த மர்ம நபர் ஒருவர் அவருடைய வாயினை பொத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மர்மநபரின் பிடியிலிருந்து தப்பப் போராடினார்.

கூக்குரல் எழுப்பினார். இதனால் பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸில் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த சிறிகௌசிக்கு கழுத்தில் 12 தையல் கள் போடப்பட்டுள்ளன. பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்