கற்றல் செயற்பாட்டுக்கு உதவி

மாணவியின் கற்றல் செயற்பாடுகளுக்காக வன்னி மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபரினால் கற்றல் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று முன்தினம் (புதன்கிழமை) வவுனியா வர்த்தக சங்கத்தின் நிதி அனுசரணையுடன் இடம்பெற்றது.

இதன்போது வவுனியா கள்ளிக்குளம் மாகவித்தியாலய க. பொ.த. சாதாரண தர மாணவியின் கல்விச்செயற்காடுகளை ஊக்குவிக்கும் முகமாக, வன்னி மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால் கடந்தகால வினாவிடை புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வவுனியா வர்த்தகர் சங்க நிர்வாகத்தினரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்