உலககிண்ண சிறந்த கோலை தெரிவு செய்தது பிபா

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆர்ஜன்ரீனாவுக்கு எதிராக பிரான்ஸ் வீரர் பவார்ட் அடித்த கோல் சிறந்த கோலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட கோல்கள் அடிக்கப்பட்டன. இதில் 18 கோல்களை தேர்வு செய்து, அதில் எது சிறந்தது என்பதை ரசிகர்கள் முடிவு செய்ய பிபா ஏற்பாடு செய்தது. இதில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வாக்களித்தனர்.

இதில் ஆர்ஜன்ரீனாவுக்கு எதிராக நொக்அவுட் போட்டியில் பிரான்ஸ் வீரர் பெஞ்ஜமின் பவார்ட் அடித்த கோல் சிறந்த கோலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நொக்அவுட் சுற்றில் ஆர்ஜன்ரீனா – பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஒரு கட்டத்தில் ஆர்ஜன்ரீனா 2-1 என முன்னிலை பெற்றிருந்தது. அதன்பின் பவார்ட் அடித்த அற்புதமான கோலால் பிரான்ஸ் 2-2 என சமநிலை பெற்றது. இதன்பின் பிரான்ஸ் 4-2 என வெற்றி பெற்றது. பவார்டின் கோல்தான் பிரான்ஸ் வெற்றிக்கு திருப்பு முனையாக அமைந்தது.

ஜப்பானுக்கு எதிராக கொலம்பியா வீரர் குயின்டேரோ அடித்த கோல் 2-வது இடத்தையும், ஆர்ஜன்ரீனாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குரோசியா அணித்தலைவர் லூகா மோட்ரிச் அடித்த கோல் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்