வீட்டுபணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற சமுர்த்தி பயனாளிகளின் பெயரில் கடன் -அரச அதிகாரிகளின் தில்லுமுல்லை வெளிச்சம் போட்டு காட்டினார் யோகேஸ்வரன் எம்.பி

வீட்டுப் பணிப் பெண்ணாக மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்ற பயனாளிகளின் சமுர்த்தி கணக்குகளில் இருந்து கோறளைப்பற்று சமுர்த்தி வங்கியில் கடன் பெறப்பட்டு ள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச அபிவிருத்தி குழு இணைத்தலைவர்களான பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் ஆகியோரது தலைமையில் இடம் பெற்ற போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்

கோறளைப்பற்று சமுர்த்தி வங்கியில் கடமை புரியும் சில உத்தியோகஸ்தர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் இதற்கான உறுதிப்படுத்தப்பட்ட கணக் காய்வு அறிக்கை தம்மிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

பயனாளிகளின் பெயர்களை பயன்படுத்தி சமுர்த்தி வங்கி கடன்களும் பெறப்பட்டுள்ளது. மாவட்ட கணக்காய்வு பகுதியினர் இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை யினை  அரசாங்க அதிபருக்கு சமர்ப்பித்துள்ளனர். அதன் பிரதி எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே இதற்கான தீவிரமான நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளேன்.

கடந்த 2018.05.11 இல் இரண்டு சமுர்த்திக் கடன் தொடர்பான விண்ணப்பங்கள் காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இரண்டு முறைப் பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொலிசார் இம் முறைப்பாடு தொடர்பாக ஆராயவில்லை. ஆனால் புதிய விண்ணப்ப படிவம் எடுப்பதற்காக என்று இம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உண்மையில் கடன் விண்ணப்ப படிவம் களவாடப்பட்டுள்ளது. அதற்கு முன்பே களவாடப்பட்ட காசு கட்டப்பட்டுள்ளது.எந்த திகதியிலே எவ்வளவு காசு கட்டப்பட்டு ள்ளது என்பதனை கணக்காய்வு திணைக்களம் எடுத்துள்ளது.

இன்னும் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளது. அது தொடர்பான கணக்காய்வு அறிக்கை என்னிடம் உள்ளது. இது தொடர்பாக மிகத் தீவிரமாக ஆராய்கின்றேன் மிகத் தீவிரமாக நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

இக் கூட்டத்தில் கோறளைப்பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிருந்தன், உதவி திட்டப்பணிப்பாளர் சிவநேசராஜா, பிரதேச திணைக்களங்களின் தலைவ ர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்