தலைமறைவான பாதாளக் குழு இந்தியாவில் – ரஞ்சித் மத்தும பண்டார

இலங்கையின் பாதாளக் குழுவினர் இந்தியாவில் தலைமறைவாகி உள்ளதாகவும், அவர்கள் குறித்த பட்டியலை இந்திய அதிகாரிகளுக்கு வழங்கவுள்ளதாகவும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த குற்றவாளிகள் தொடர்பான அனைத்து விபரங்களையும் இந்திய அதிகாரிகள் கோரியுள்ள நிலையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள இந்திய தூதுவருடன் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடியதாக தெரிவித்த அமைச்சர், அதற்கமைய இந்தியாவிற்கு வழங்குவதற்கான குற்றவாளிகள் தொடர்பான தகவல் பட்டியலை தயாரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறாக சர்வதேச நாடுகளில் தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்வதற்கு தமக்கு ஆதரவு வழங்குமாறு இதற்கு முன்னர் ஜனாதிபதியும் சர்வதேச சமூகத்தினரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்