கண்டாவளை கோட்டத்தில் முதலாவது திறன்விருத்தி வகுப்பறை ஆரம்பிப்பு

கிளி/முருகானந்த ஆரம்பப் பாடசாலையில் பிரான்ஸ் முரசு மக்கள் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்டதிறன் விருத்தி வகுப்பறை Smart glass room இன்று (27-07-2018) வெள்ளிக்கிழமை  மு.ப 10.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது

சுமார் மூன்று லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இவ் வகுப்பறை திறப்பு விழா தலைவர் திருமதி இராசேஸ்ஸ்வரி பாலேந்திரா(பாடசாலை முதல்வர்) தலமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக சி.துரைராசா (முன்னைநாள் அதிபர்),சிறப்பு விருந்தினராக சு.தர்மரத்தினம் (கோட்டக்கல்வி பணிப்பாளர் கண்டாவளை) திருமதி   சி.சுகந்தி (பிரான்ஸ். முரசு.ம.ஒன்றியம்) ஆகியோர் கலந்து கொண்டு  திறன் விருத்தி வகுப்பறையை திறந்து வைத்தனர்

இந் நிகழ்வில் முரசு.கிராமத்தின் கிராம அபிவிருத்திசங்க உறுப்பினர்கள்,மாதர்சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சம்பந்தமான அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பிரதேசபை பிரதிநிதிகள் கமக்கார அமைப்பினர் ,கல்லூரியில் கல்விபயின்று பல்வேறு பணிகளில் உள்ளோர்
கிராமத்தில் உள்ள ஊரக வளர்ச்சியில் ஆர்வமுள்ள விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் கண்டாவளைக் கல்விக் கோட்டத்தில் முதலாவது திறன்விருத்தி வகுப்பறையே இன்று ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்