கோதுமை மாவுக்கு விசேட இறக்குமதி வரி

எதிர்காலத்தில் கோதுமை மாவிற்கு விசேட வரியொன்றை விதிக்க திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். தேவையை விட மேலதிக அரிசி உற்பத்தி செய்யப்படும் நிலையில் இந்த முடிவை எடுக்க நேரிட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

விவசாய அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டிலே அமைச்சர் இதனை தெரிவித்தார். நாட்டுக்கு தேவையான கோதுமையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் பெருமளவு நிதியை செலவிடுகிறது. விசேட வரி விதிக்கப்படுவதினூடாக இந்த செலவை குறைக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

கோதுமை மா தவிர வௌிநாடுகளில் இருந்து தருவிக்கும் பழவகைகள், பெரிய வெங்காயம், உருளைக் கிழங்கு, சோளம் போன்றவற்றிற்கும் எதிர்காலத்தில் வரி அறவிட இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விவாசாயிகளை ஊக்குவிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளிடம் இருந்து நியாயமான விலைக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு விசேட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் இதற்கு சகல பிரதேசங்களிலும் தேவையான ஏற்பாடுகள் முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். வறட்சியின் போது முகங்கொடுப்பதற்காக பலா போன்ற மரங்களை நடும் திட்டமொன்றை ஆரம்பிப்பதாகவும் எதிர்வரும் வாரங்களில் மீண்டும் வறட்சி ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்