முதல் முறையாக இடம்பெற்ற காரைதீவு மாவடி கந்தனின் தேரோட்ட நிகழ்வு…

(தனுஜன் ஜெயராஜ் )

கிழக்கிலங்கை காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடி மஹோற்சவத்தை முன்னிட்டு இன்று (27) காலை தேரோட்டம் இடம் பெற்றது.

முதன் முதலாக நடைபெற்ற இந் நிகழ்வில் ஆயிரக்கணக்காக பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி மஹோற்சவ நிகழ்வின் பிரதம குருவான சிவஸ்ரீ லோகநாதன் குருக்களின் தலைமையில் தேரோட்ட நிகழ்வு நடைபெற்றது.இந் நிகழ்வில் ஆண்கள் ஒரு புறமும் பெண்கள் ஒரு புறமும் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.

பல பிரதேசங்களிலிருந்து பக்தர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். நாளை காலை சமுத்திரத்தில் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் நடை பெறவுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்