ஒரு இலட்சத்து 25 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் கொள்வனவு

விவசாயிகளிடம் இருந்து ஒரு இலட்சத்து 25 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை எதிர்பார்த்துள்ளது.

திறைசேரி இதற்கென 490 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் உபாலி மொஹோட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் உரிய தரத்துடன் கூடிய நெல் கொள்வனவு செய்யப்பட இருக்கிறது. விவசாயிகளின் கையிருப்பில் உள்ள ஈரமான நெல்லை உலர்த்துவதற்கான வேலைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தலைவர் உபாலி மொஹோட்டி கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்