வடக்கு,கிழக்கில் மேலும் காணிகள் விடுவிப்பு

 

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முப்படைகள் வசமிருக்கும் பெரும்பாலான காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் தமது வசமிருந்த ஐயாயிரத்து 160 ஏக்கர் காணியை கடந்தாண்டு முப்படைகள் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

2017 ஆம் வருடத்திற்கான செயற்பாட்டு அறிக்கையில் புள்ளிவிபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட காணிகளில் நான்காயிரத்து 300 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அரச காணிகளாகவும், எஞ்சியவை தனியாருக்கு சொந்தமான காணிகளாகவும் காணப்படுகின்றன.
வடக்கில் நான்காயிரத்து 800 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளும், கிழக்கில் சுமார் 350 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட்டன. அரசாங்கம் நல்லிணக்க மீள்குடியமர்வு முயற்சியில் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகிறது. பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்