ஆஸி ரி 20 தேர்வு குழுத் தலைவராக லாங்கர் நியமனம்

ஆஸி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஜஸ்டின் லாங்கர் ரி20 தேர்வு குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆஸி கிரிக்கெட் அணியின் ரி 20 தேர்வு குழுத் தலைவராக முன்னாள் வீரர் மார்க் வோ இருந்தார். இவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால் அந்த பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் தற்போது ஆஸி அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஜஸ்டின் லாங்கர் தேர்வு குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஆஸி கிரிக்கெட் அணியின் செயல்திறன் மேலாளர் பாட் ஹோவார்ட் கூறுகையில், ‘‘ஐசிசி ரி20 உலகக்கோப்பை வரும் 2020-ம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்வு குழுத்தலைவராக லாங்கர் நியமிக்கப்பட்டிருப்பது சிறப்பானது.

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் அனைத்து போட்டிகளுக்கும் பயிற்சியாளராக விளங்கும் ஜஸ்டின் லாங்கர், உள்ளூர் போட்டியான பிக் பாஷ் லீக் தொடரையும், அத்தொடரில் விளையாடும் வீரர்கள் பற்றியும் அறிவதில் பெரும் ஆற்றல் மிக்கவர்.

மேலாளர்கள் மற்றும் பிக் பாஷ் லீக் தொடர் பயிற்சியாளர்களோடு இணைந்து ஜஸ்டின் லாங்கர் அவுஸ்ரேலிய அணியின் ரி 20 தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வார்” எனக் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்