வவுனியா நகரில் அதிகரிக்கும் சீர்கேடு

வவுனியா நகரில் இளம் பெண்கள் கடைத்தொகுதிகளுக்கு முன்னின்று பாலியல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து பேருந்து நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கும் போது,

அண்மைக்காலங்களாக ஒவ்வொரு மாத இறுதிப் பகுதியிலும் அதாவது 20ஆம் திகதிக்கு பின்னர் வவுனியா நகரில் இளம் பெண்கள் பாலியல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கில் இப்பகுதியில் நடமாடுகின்றனர். நீண்டநேரமாக காத்திருப்பதுடன், தொலைபேசிகளிலும் தொடர்பு கொண்டு நீண்டநேரமாக பேசி வருகின்றனர். அத்துடன் அப்பகுதிக்கு வரும் ஆண்களுடன் சென்றும் விடுகிறார்கள். இதனால் இப்பகுதியில் சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றது.

இப்பகுதிக்கு வரும் பெரும்பான்மை இனத்தவர்கள் சிவில் உடையில் அவர்களுடன் உரையாடலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வியாபார நிலையங்களுக்கு பொதுமக்களின் வரவு குறைந்து காணப்படுகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை எவையும் பொலிசாராலோ அல்லது நகரசபையினராலோ எடுக்கப்படவில்லை. இவ்வாறு கலாசார சீர்கேடாக மாறிவரும் நகரை மீட்டுத்தருமாறு வர்த்தகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் நகரசபையினால் வவுனியாவிலிருந்த மசாஜ் நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் தற்போது காலசார சீர்கேடுகள் இடம்பெறும் நடவடிக்கையினைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் ஆக்கபூர்வமாக இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்