வெலிக்கடை சிறை படுகொலை நினைவாக இரத்ததானம்

வெலிக்கடைச் சிறைச்சாலை படுகொலையின் 35 ஆவது வருட நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஏற்பாட்டில் வவுனியாவில் இராத்ததான நிகழ்வு இன்று இடம்பெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி மற்றும் முன்னணிப் போராளிகளான ஜெகன், தேவன், நடேசுதாசன், குமார், சிவபாதம் உட்பட்ட வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட 53பேர் மற்றும் யூலைக் கலவரத்தின் மூலம் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களின் 35வது ஆண்டு நினைவாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்ததான முகாம் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலமையில் ஆரம்பமான இந் நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர் கோகிலகுமார் அஞ்சலா, அக்கினி சிறகுகள் அமைப்பின் தலைவர் அரவிந்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணியினர், கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு தமது குருதிகளை கொடையளித்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்