சீன சந்தைக்குச் செல்லும் இலங்கையின் வாழைப்பழங்கள்

சீனச் சந்தைக்கு, இலங்கையின் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான உடன்பாடு ஒன்றில் சீனா அரசாங்கத்துடன் இலங்கையின் விவசாய அமைச்சு கையெழுத்திடவுள்ளது.

இலங்கையின் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

‘உயர் தரமான, அம்புல் ( புளி வாழைப்பழமை), செவ்வாழைப் பழம், கோழிக்கோடு வாழைப்பழம் ஆகிய ரகங்களே சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

இலங்கையில் சுமார் 29 வகையான வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் பல இலங்கையை தாயகமாக கொண்டவை.

இங்கு பரவலாக வாழைப் பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டு தோறும், 450,000 மெட்றிக் தொன் வாழைப் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்